Tuesday, April 21, 2009

நாஞ்சில் சம்பத் விடுதலை .

நாஞ்சில் சம்பத் விடுதலை

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உயர் நீதி மன்றம்அதிரடி தீர்ப்பு.

Sunday, March 15, 2009

நாஞ்சில் சம்பத் கைது ஏன்?

இன்று காலை சிறைக்குள்ளேயே நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அவரது கைதின் நோக்கம்
மதிமுக ஐ பலவீனம் செய்ய வேண்டும் என்பதுதான் சோனியா ஐ திட்டியதால் தேச ஏறயான்மைக்கு தீங்கு என்பது கருணாநிதி இன் கேடு கெட்ட அரசியல் நிலைபாடு.
இதனால் மதிமுக ஐ அமைப்பு ரீதியாய் ஒடுக்க நினைக்கும் கயவாளி கருணாநிதி இனி வரும் காலங்களில் திமுக தொண்டர்கள் வைகோ ஐ தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது பிள்ளைகளை ஒதுக்குவார்கள் என்பது உறுதி.

நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் -கைது

சென்னை: மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் போராட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாஞ்சில் சம்பத், இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது ஏவப்பட்டு உள்ள தேச பாதுகாப்பு சட்ட அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் 20-ந் தேதி வெள்ளிக்கிழமையும், சென்னையில் மார்ச் 21-ந் தேதி சனிக்கிழமையும், காலை 11 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.கோவையிலும், சென்னையிலும் நான் கலந்துகொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Sunday, March 8, 2009

சென்னையில் நாஞ்சில் சம்பத் கைது

சென்னை: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியது தொடர்பாக திருப்பூரில் தொடரப்பட்ட வழக்கில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சென்னையில், திருப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரில் மார்ச் 1ம் தேதி `நாதியற்றவனா ஈழத்தமிழன்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு நாஞ்சில் சம்பத் பேசுகையில், இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி இறந்து விட்டான். ஆனால் சேலை கட்டி வந்த முசோலினி தான் சோனியா. தன்னை பிடிக்காத, தனக்கு பிடிக்காத மாமியார் இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்துள்ளார்.

மன்மோகன்சிங் வாயில்லாதவர். பிரபாகரனை சர்வாதிகாரி என பதிவு செய்வதற்காகவா கருணாநிதி தமிழக முதல்வராக இருக்கிறார்? தமிழகத்தில் 12 மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.

ஒரு லட்சம் தமிழர்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் டெல்லியில் தமிழகத்தின் தூதரகம் அமைய வேண்டிய நிலை ஏற்படும் என்று பேசியிருந்தார் சம்பத்.

இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீஸார், நாஞ்சில் சம்பத் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் அவரைக் கைது செய்வதற்காக தனிப்படையினர் நேற்று முன்தினம் கோவை வருவதாக இருந்த சம்பத்தைக் கைது செய்ய காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து நேற்று சென்னையில் நடந்த மதிமுக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சம்பத் ரயில் மூலம் சென்னை வந்தார்.

அவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்துக் கைது செய்ய திருப்பூர் போலீஸார் காத்திருந்தனர். ஆனால் சம்பத் எழும்பூர் வராமல் வழியிலேயே இறங்கி விட்டார்.

மேலும் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். கூட்டம் முடிந்து வரும்போது கைது செய்யலாம் என மதிமுக தலைமைக் கழகமான தாயகத்திற்கு வெளியே போலீஸார் காத்திருந்தனர். ஆனால் மெயின் வாசல் வழியாக வெளியேறாமல் வேறு வழியாக சம்பத் வெளியேறிப் போய் விட்டார்.

குழம்பிப் போன போலீஸார், அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டில் சம்பத் தங்கியிருக்கலாம் என சந்தேகப்பட்டு அங்கு விரைந்தனர். ஆனால் அங்கும் அவர் இல்லை.

இப்படி போலீஸாரை டபாய்த்த நாஞ்சில் சம்பத் நேற்று இரவு தாம்பரத்தில் நடந்த, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்து இறந்தவர்களுக்கு நடந்த வீர வணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்தத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. விரைந்து வந்த போலீஸார் சம்பத் வந்ததும் அவரைக் கைது செய்தனர். பின்னர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்ததும் மதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே குவிந்தனர். முன்னெச்சரிக்கையாக போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் சம்பத்தை திருப்பூர் போலீஸார் வேனில் திருப்பூர் கொண்டு சென்றனர்.

கோவை சிறையில் அடைப்பு

திருப்பூர் கொண்டு செல்லப்பட்ட நாஞ்சில் சம்பத்தை போலீஸார் இன்று அதிகாலையில் அவினாசி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது மாஜிஸ்திரேட், சம்பத்தை 20ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பத்தை கோவை கொண்டு சென்று அங்குள்ள மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

அதிமுக கூட்டணியின் பிரசாரத்தை முடக்கவே சம்பத் கைது: வைகோ

சென்னை: பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நாஞ்சில் சம்பத்தின் பிரசாரம் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் வலிமையான ஆயுதம். அதை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர் மீது வழக்கு போட்டு போலீசாரை ஏவிவிட்டுள்ளார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுகவின் உயர் நிலைக் குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நேற்று கட்சித் தலைமையகமான தாயகத்தில் நடந்தது.

கூட்டம் முடிந்த பிறகு வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

எந்த தொகுதிகளில் போட்டியிடலாம்? எந்த தொகுதிகளை கேட்கலாம்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எந்த தேதியில் உசிதமாக இருக்கிறதோ அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறும். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை இப்போது சொல்வதற்கில்லை.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத, நெருக்கடி நிலை நிலவுகிறது. ம.தி.மு.க. கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்தை கைது செய்வதற்காக திருப்பூரில் இருந்து போலீசார் புறப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். நீதிகேட்டு போராடுவோம்.

பிரசாரத்தை முடக்கவே சம்பத் கைது

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நாஞ்சில் சம்பத்தின் பிரசாரம் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் வலிமையான ஆயுதம். அதை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர் மீது வழக்கு போட்டு போலீசாரை ஏவிவிட்டுள்ளார்கள்.

நாங்கள் நாட்டின் இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வரவே கூடாது. ஈழத்தமிழருக்கு பெரும் கேடு செய்தது காங்கிரஸ் அரசு. அதை அகற்ற ம.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் என்றார் வைகோ.

அதிமுக கூட்டணியில் பாமக உள்பட வேறு யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற கேள்விக்கு வைகோ பதிலளிக்கையில், கூட்டணியில் யார் இடம்பெறுவார்கள் என்பதை ஆரூடம் கணித்து சொல்ல முடியாது. அ.தி.மு.க. தலைமை இந்த கூட்டணியை மிகப்பெரும் வலுவானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும் என்று நினைக்கிறேன் என்றார் வைகோ.

கண்ணப்பன் வராதது குறித்து கேட்ட கேள்விக்கு, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு தெரியாது. வருவார் என்று எதிர்பார்த்தோம். அழைப்பிதழ் கொடுத்தோம். ஆனால் வரவில்லை. எந்த தகவலும் எங்களுக்கு அனுப்பவில்லை.

டெல்லியில் நடந்த உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்கும் அவர் வரவில்லை. அதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை. எங்களுக்குள் எந்த மனக் கசப்பும் இல்லை. முதல்வர் கருணாநிதியை கண்ணப்பன் சந்தித்தது முன்கூட்டியே எனக்கு தெரியாது என்றார் வைகோ.

Saturday, March 7, 2009

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய குற்றம்: நாஞ்சில் சம்பத் சென்னையில் கைது

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று இரவு சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடை ஏறியபோது அவர் கைது செய்யப்பட்டார்.


மார்ச் 1ஆம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இதில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்ய திருப்பூர் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நாஞ்சில் சம்பத் சென்னையில் இருப்பதாகவும், அவரை கைது செய்ய திருப்பூர் பொலிஸார் சென்னைக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று இரவு சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக அவர் மேடையேறியபோது திருப்பூர் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

கலைஞர் அரசு ஒரு குறை பிரசவம்!

நாஞ்சில் சம்பத். இவரைத்தான் தமிழக காவல்துறை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிவிட்டதற்காக உடனடியாக அவரைக் கைது செய்து இறையாண்மையை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இந்தச் செய்திகளைப் படித்தபோது 2006 மே மாதத்தில் கல்கி இதழுக்காக நாஞ்சில் சம்பத்திடம் பேட்டியெடுத்தது நினைவுக்கு வந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதற்கு தமது கனல் சுரக்கும் வார்த்தைகளால் அச்சாரம் போட்டவர் ம.தி.மு.கவின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ம.தி.மு.க எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளது என்பது குறித்து அவரிடம் பேசியிருந்தேன். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள் இங்கே:

திமுக கூட்டணியின் வெற்றி குறித்து?

மிகப்பெரிய கூட்டணியை எதிர்த்து, மிருகபலம் கொண்ட சன் டிவியை எதிர்த்து, நிராயுதபாணியாக களத்தில் நின்று நாங்கள் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்றைக்கு தி.மு.க கூட்டணியினர் “தப்பித்தோம்.. பிழைத்தோம்” என்ற நிலைமையில்தான் தட்டுத்தடுமாறி ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆகவே இதை தோல்வி என்றே நாங்கள் கருதவில்லை. கூட்டணி உருவானபோது இருந்த அதே மனநிலையில்தான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். அதிமுகவுடனான இந்தக்கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் உளமார நினைக்கிறோம்.

வைகோவின் பிரச்சாரம் அதிமுக தலைமை எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை என்ற ஒரு கருத்து இருக்கிறதே..?

தேர்தல் களத்தில் வைகோவுக்கு ஈடுகொடுத்துப் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு எதிர்முகாமில் ஆள் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தமிழக சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்கட்சியாக அ.தி.மு.க வந்துள்ளதற்கு வைகோவின் பிரச்சாரம் முக்கியமான காரணம் என்பதை அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். ஆகவே வைகோவின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பது கண்மூடித்தனமான கற்பனைக் குற்றச்சாட்டு.

தி.மு.க கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றிய பிறகு, கூட்டணி விஷயத்தில் தவறு செய்து விட்டோமே என்று வருத்தப்பட்டீர்களா?

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்திருந்தால் எங்களை அரவணைப்பது போல அழித்து இருப்பார்கள். திட்டமிட்டுத் தோற்கடித்திருப்பார்கள். ஆகவே, இதுபோன்ற எண்ணம் எங்கள் யாருக்குமே வரவில்லை.

பாஜக, தே.மு.தி.க போன்ற கட்சிகள் கூட தனித்து நின்றுதான் தங்கள் முதல் பிரதிநிதியை சட்டமன்றத்துக்கு அனுப்பின. ஆனால் ம.தி.மு.கவுக்கு எம்.பிக்களும் சரி. எம்.எல்.ஏக்களும் சரி. அதி.முக தயவுடன் தான் கிடைத்த்துள்ளது. இது உங்களுக்கு பலவீனமான விஷயம் இல்லையா?

இன்றைய அரசியல் சூழலில் எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று மிகப்பெரிய வெற்றிகளை எல்லாம் பெறவே முடியாது. அ.தி.மு.கவுடன் இணைந்து சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கு ம.தி.முக. பிரதிநிதிகளை அனுப்பியதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். அதேசமயம் இப்போது எங்கள் இலக்கு இப்போது உள்ள ஆறை நூறாக்குவதுதானே தவிர வேறு எதுவும் இல்லை.

விஜயகாந்த் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் ம.தி.மு.க, பாமக போன்ற கட்சிகளின் கனவுகளைத் தகர்த்துவிட்டதாகச் சொல்லலாமா?

எங்களுடைய இயக்கம் கொள்கை சார்ந்தது. லட்சியம் சார்ந்த இளைஞர்களின் பாசறை. ஆனால் விஜயகாந்துக்கு விழுந்த வாக்குகள் சினிமாத்தனமான வாக்குகள். தமிழகத்தில் சினிமா கவர்ச்சிக்கு மயங்குவதற்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அது இந்தமுறை விஜயகாந்துக்கு சென்றுள்ளது. ஆகவே எங்கள் இயக்கத்தை இதுபோன்ற சினிமாத்தனமான இயக்கத்துடன் ஒப்பிடுவதில் எங்களுக்கு உடன்பாடே இல்லை. எங்களைப் பொறுத்தவரை தளி தொகுதியில் சுயேட்சை ஜெயித்தது போலவே விஜயகாந்த விருதாசலத்தில் ஜெயித்துள்ளார். அவ்வளவுதான்.

தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க உங்கள் கூட்டணி சதி செய்வதாக கலைஞர் குற்றம்சாட்டுகிறாரே..?

கலைஞர் ஆட்சி ஒரு குறை பிரசவம். ஒவ்வொரு நாளும் அச்சத்தோடும் பீதியோடும் ஆட்சியை நடத்த வேண்டி இருப்பதால் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே இந்த ஆட்சிக்கு ஆயுள் குறைவுதான். ஆட்சி நிர்வாகத்தின் ஆணிவேர் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய உள்ளாட்சித்துறையை ஸ்டாலினிடம் கொடுத்து, ஆயிரம் பிறை கண்ட தலைவர்களையெல்லாம் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்துக்கு தள்ளியிருப்பது திமுகவுள்ளேயே புகைச்சலைக் கிளம்பியுள்ளது. ஆனாலும் அதை மறைக்க, அமைச்சரவையில் மேலும் நான்கு வாரிசுகளுக்கு இடமளித்து தனது செயலை நியாயப்படுத்த காய்நகர்த்தி இருக்கிறார் கலைஞர். ஆகவே சதி செய்துதான் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே கவிழும்.


Thanks : http://india360degree.blogspot.com/2009/03/blog-post_07.html